SPRM myThoughts

Thoughts has no boundaries and these are the random bits n bytes of myThoughts

SPRM myThoughts - Thoughts has no boundaries and these are the random bits n bytes of myThoughts

Ponniyin Selvan – Pudhu vellam

பொன்னியின் செல்வன்

முதல் பாகம் – புது வெள்ளம்

1: ஆடித்திருநாள்
2: ஆழ்வார்க்கடியான் நம்பி
3: விண்ணகரக் கோயில்
4: கடம்பூர் மாளிகை
5: குரவைக் கூத்து
6: நடுநிசிக் கூட்டம்
7: சிரிப்பும் கொதிப்பும்
8: பல்லக்கில் யார்?
9: வழிநடைப் பேச்சு
10: குடந்தை சோதிடர்
11: திடும்பிரவேசம்
12: நந்தினி
13: வளர்பிறைச் சந்திரன்
14: ஆற்றங்கரை முதலை
15: வானதியின் ஜாலம்
16: அருள்மொழிவர்மர்
17: குதிரை பாய்ந்தது!
18: இடும்பன்காரி
19: ரணகள அரண்யம்
20: “முதற் பகைவன்!”
21: திரை சலசலத்தது!
22: வேளக்காரப் படை
23: அமுதனின் அன்னை
24: காக்கையும் குயிலும்
25: கோட்டைக்குள்ளே
26: “அபாயம்! அபாயம்!”
27: ஆஸ்தானப் புலவர்கள்
28: இரும்புப் பிடி
29: “நம் விருந்தாளி”
30: சித்திர மண்டபம்
31: “திருடர்! திருடர்!”
32: பரிசோதனை
33: மரத்தில் ஒரு மங்கை!
34: லதா மண்டபம்
35: மந்திரவாதி
36: “ஞாபகம் இருக்கிறதா?”
37: சிம்மங்கள் மோதின!
38: நந்தினியின் ஊடல்
39: உலகம் சுழன்றது!
40: இருள் மாளிகை
41: நிலவறை
42: நட்புக்கு அழகா?
43: பழையாறை
44: “எல்லாம் அவள் வேலை!”
45: குற்றம் செய்த ஒற்றன்
46: மக்களின் முணுமுணுப்பு
47: ஈசான சிவபட்டர்
48: நீர்ச் சுழலும் விழிச் சுழலும்
49: விந்தையிலும் விந்தை!
50: பராந்தகர் ஆதுரசாலை
51: மாமல்லபுரம்
52: கிழவன் கல்யாணம்
53: மலையமான் ஆவேசம்
54: “நஞ்சினும் கொடியாள்”
55: நந்தினியின் காதலன்
56: அந்தப்புர சம்பவம்
57: மாய மோகினி

Print Friendly

Ponniyin Selvan – Aadithirunal

ஆடித்திருநாள்

ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ல் எழுதியது) ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக.

தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் ‘வீராணத்து ஏரி’ என்ற பெயரால் வழங்கி வருகிறது.புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது. நம் மூதாதையர்கள் தங்களுடைய நலனுக்கும் தங்கள் காலத்திய மக்களின் நலனுக்கும் உரிய காரியங்களை மட்டுமா செய்தார்கள்? தாய்த் திருநாட்டில் தங்களுக்குப் பிற்காலத்தில் வாழையடி வாழையாக வரப்போகும் ஆயிரங்கால சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும் மாபெரும் செயல்களை நிறைவேற்றி விட்டுப் போனார்கள் அல்லவா? Continue reading

Print Friendly

Ponniyin Selvan – Aazhvarkadiyan Nambi

ஆழ்வார்க்கடியான் நம்பி

ஏரிக் கரையிலிருந்து கீழிறங்கித் தென்திசை சென்ற பாதையில் குதிரையைச் செலுத்தியபோது வந்தியத்தேவனுடைய உள்ளம் ஏரி அலைகளின் மீது நடனமாடிய படகைப் போல் ஆனந்தக் கூத்தாடியது. உள்ளத்தின் உள்ளே மறைந்து கிடந்த குதூகலம் பொங்கித் ததும்பியது. வாழ்க்கையில் வேறு யாரும் காணாத அதிசய அனுபவங்களைத் தான் அடையும் காலம் நெருங்கி விட்டதென்று அவனுடைய உள்ளுணர்ச்சி சொல்லியது. சோழ நாட்டை அணுகும்போதே இவ்வளவு ஆனந்தக் கோலாகலமாயிருக்கிறதே? கொள்ளிடத்தைத் தாண்டி விட்ட பின்னர் அச்சோழ நாட்டின் நீர்வளமும் நிலவளமும் எப்படியிருக்கும்? அந்நாட்டில் வாழும் மக்களும் மங்கையரும் எப்படியிருப்பார்கள்? எத்தனை நதிகள்? எத்தனை குளங்கள்? எத்தனை தௌிநீர் ஓடைகள்? கவிகளிலும் காவியங்களிலும் பாடப்பெற்ற பொன்னி நதியின் காட்சி எப்படியிருக்கும்? அதன் கரைகளிலே பூத்துக் குலுங்கும் புன்னை மரங்களும் கொன்னை மரங்களும் கடம்ப மரங்களும் எத்தகைய மனோகரமான காட்சியாயிருக்கும்? நீரோடைகளில் குவளைகளும் குமுதங்களும் கண்காட்டி அழைப்பதும் செந்தாமரைகள் முகமலர்ந்து வரவேற்பதும் எத்தகைய இனிய காட்சியாயிருக்கும்? காவேரியின் இரு கரைகளிலும் சிவபக்திச் செல்வர்களான சோழப் பரம்பரையினர் எடுப்பித்துள்ள அற்புத வேலைப்பாடமைந்த ஆலயங்கள் எவ்வளவு அழகாயிருக்கும்?

ஆகா! பழையாறை நகர்! சோழ மன்னர்களின் தலைநகர்! பூம்புகாரையும் உறையூரையும் சிறிய குக்கிராமங்களாகச் செய்துவிட்ட பழையாறை! அந்நகரிலுள்ள மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் படை வீடுகளும் கடைவீதிகளும் சிவாலயக் கற்றளிகளும் திருமாலுக்குரிய விண்ணகரங்களும் எப்படியிருக்கும்? அந்த ஆலயங்களில் இசை வல்லவர்கள் இனிய குரலில் தேவாரப் பாடல்களையும் திருவாய்மொழிப் பாசுரங்களையும் பாடக்கேட்டோர் பரவசமடைவார்கள் என்று வந்தியத்தேவன் கேள்வியுற்றிருந்தான். அவற்றையெல்லாம் கேட்கும் பேறு தனக்கு விரைவில் கிடைக்கப் போகிறது இது மட்டுந்தானா? சில நாளைக்கு முன்பு வரையில் தான் கனவிலும் கருதாத சில பேறுகளும் கிட்டப்போகின்றன. வீரத்தில் வேலனையும் அழகில் மன்மதனையும் நிகர்த்த பராந்தக சுந்தர சோழ மகாராஜாவை நேருக்கு நேர் காணப்போகிறான். அவ்வளவுதானா? அவருடைய செல்வப் புதல்வி, ஒப்புயர்வில்லாத நாரீமணி, குந்தவைப் பிராட்டியையும் காணப் போகிறான். Continue reading

Print Friendly

Page optimized by WP Minify WordPress Plugin